#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல நடிகருக்கு ஜோடியாகிறார் தெய்வமகள் சத்யா! ஹீரோ யார் தெரியுமா?
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம்கள் தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். தெய்வம்கள் தொடர் வெற்றிபெற வாணி போஜனும் மிகப்பெரிய காரணம் என்றே கூறலாம். ஏனெனலில் இவருக்காகவே இந்த சீரியலை பார்த்த ரசிகர்கள் ஏராளம்.
தெய்வமகள் தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து சன் தொலைக்காட்சியில் ஒருசில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறுவர்கள் பங்கேற்கும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் போட்டியில் நடுவராக பங்கேற்றார் வாணி போஜன்.
இந்நிலையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு போகும் முயற்சியில் இருந்த வாணி போஜனுக்கு வெள்ளித்திரையில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஆம், பிரபல நடிகர் வைபவுக்கு ஜோடியாக அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வாணி போஜன். இந்த படத்தின் நடிகர் நிதின் சத்யா தயாரிக்கவுள்ளார்.