#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை வாணி போஜன் வெளியிட்ட புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்! புகைப்படம் இதோ!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இவருக்காகவே இந்த தொடரை பார்த்த ரசிகர்கள் ஏராளம். வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த தெய்வமகள் தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து ஒருசில போட்டிகளில் நடுவராக பங்கேற்றுவந்தார்.
அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறுவர்கள் பங்கேற்கும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றிலும் நடுவராக பங்கேற்றார். தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்லும் முயற்சியில் இறங்கிய வாணி போஜனுக்கு பிரபல நடிகர் வைபவ் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சீரியல், டிவி நிகழ்ச்சிகள் என அனைத்திலும் குடும்ப பாங்கான தோற்றத்தில்தான் வாணி போஜன் காட்சி தருவார், இந்நிலையில் சமீபத்தில் மாடர்ன் உடைகளில் வாணி போஜன் நடத்திய போட்டோ ஷூட் அனைவரையும் ஈர்த்துள்ளது. மாடர்ன் உடையில் மிகவும் அழகாக தோன்றும் வாணி போஜனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.