பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தனது காதலியை கரம்பிடித்த பிரபல சன் டிவி பிரபலம்! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!!
தமிழில் சின்னத்திரையில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மானஸ் சவாலி. இவர் பிரபல தொலைக்காட்சியில் வாணி ராணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். மேலும் இவர் சந்திரலேகா என்ற சீரியலில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மானஸ்க்கும், நீரஜாவிற்கும் சென்னை திருவான்மியூரில் உள்ள போஸ் மண்டபத்தில் ஏப்ரல் 22 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து நீரஜா கூறுகையில் எங்களது 10 ஆண்டு காதல் வெற்றி அடைந்தது. மிகவும் சந்தோசமாக உள்ளது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.