#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
4 இல்ல 40 கல்யாணம் கூட பண்ணுவேன்.. திருமண கோலத்தில் வைரலான புகைப்படம்! ஆவேசமான வனிதா!!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமான வனிதா அடுத்ததாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனிதா, பவர் ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது.
இதனை கண்ட ரசிகர்கள் வனிதா நான்காவது திருமணம் செய்து கொண்டாரா? என கேள்வி எழுப்பி வந்துள்ளனர். மேலும் சிலர் இது எந்த படத்திற்கான பிரமோஷன் எனவும் கேட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் பிக்கப் ட்ராப் என்ற படத்திற்கான போட்டோ ஷூட் என தெரியவந்துள்ளது.
மேலும் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வனிதா, பவர் ஸ்டாருடன் திருமணம் செய்துகொண்டது போல் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் திரைப்படத்திற்கான விளம்பரம். இரண்டு நடிகர்கள் ஒன்றாக புகைப்படம் வெளியிட்டால் உடனே அதை திருமணம் எனக்கூறி சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும். நான் 4 இல்லை 40 திருமணம் கூட செய்து கொள்வேன்.
அது எனது விருப்பம். ஆனால் நான் 40 கல்யாணமெல்லாம் பண்ண மாட்டேன். இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை. மேலும் கண்டிப்பாக நான் சாமியார் ஆகமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.