பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
3 வது திருமணம் முடிந்து 2 மாதம் கூட முடியல..! அதுக்குள்ள வனிதாவுக்கு நேர்ந்த சோகம்..! பீட்டர் பால் மருத்துவமனையில் அனுமதி.!
வனிதாவின் கணவர் பீட்டர்பால் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் மூன்று மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானவர் நடிகை வனிதா. பிக்பாஸ் வீட்டில் நடந்த பெரும்பாலான பிரச்னைக்குளுக்கு இவர்தான் காரணம் என ரசிகர்கள் இவரை வெறுக்க தொடங்கினர். அதேநேரம் இவருக்கு சிலர் ஆதரவும் தெரிவித்துவந்தனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் வனிதா மீதான சர்ச்சை பேசுச்சுகள் சமூக வலைத்தளங்களில் நின்றபாடில்லை. இதனிடையேதான் வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார். இது மேலும் பேசுபொருளாகியது.
நடிகை கஸ்தூரி, லஷ்மி ராமகிருஷ்ணன் நாஞ்சில் விஜயன் மற்றும் சூர்யா தேவி என்ற பெண் ஆகியோர் வனிதா குறித்து பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பேசிவந்தனர். வனிதாவும் இவர்களின் பேச்சுக்கு தக்க பதிலடிகொடுத்துவந்தார். இந்த பிரச்சனை முடிவதற்குள் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னிடம் விவாகரத்து பெறாமலேயே இத்திருமணம் நடைபெற்றதாக போலீசில் புகாரளித்தார். இதுகுறித்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இப்படி திருமணம் முடிந்ததில் இருந்து ஒரே பிரச்சனையாக போய்க்கொண்டிருந்தநிலையில் தற்போது வனிதாவுக்கு மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. நேற்று இரவு திடீரென பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.