வாவ்..தலைவியா இது! வாத்தி கம்மிங் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட நடிகை வரலக்ஷ்மி! வாயைப் பிளந்த ரசிகர்கள்!!



varalakshmi-dance-to-vaathi-coming-song

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பெரும் வசூல் சாதனையும் படைத்தது.  இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ஹிட்டானது.

 அதிலும் குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் மற்றும் அப்பாடலுக்கு விஜய் ஆடும் நடனம் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. மேலும் சிறுவர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள்,விளையாட்டு வீரர்கள் என பலரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை வரலட்சுமி திருமண நிகழ்ச்சி ஒன்றில் தனது நண்பர்களுடன் சேர்ந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ வெளியான நிலையில் அதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.