மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிம்புவின் அசத்தலான வாய்ஸில் வெறித்தனமாக வெளிவந்த தீ தளபதி பாடல்... வைரலாகும் வீடியோ!!
இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தளபதியின் 66 வது படமாக உருவாகி வரும் படம் தான் வாரிசு. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. வாரிசு திரைப்படம் வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. சிம்புவின் அசத்தலான வாய்ஸில் தீ தளபதி பாடல் வெளியாகியுள்ளது.