#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வேற லெவலில் களைகட்டபோகும் தளபதியின் வாரிசு! இசையமைப்பாளர் தமன் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் தளபதி விஜய் தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடித்து வரும் 66வது படத்திற்கு வாரிசு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயசுதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தில் ராஜு தயாரிக்கும் வாரிசு படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் தமன் வாரிசு படம் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது வாரிசு படத்தின் கம்போசிங் பணியை தான் தொடங்கிவிட்டதாக தெரிவித்து, இயக்குனர் வம்சி மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோர்களுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தில் விவேக் பாடல் எழுதுவது உறுதியாகியுள்ளது. செண்டிமெண்ட் படமான இதில் பாடல்கள் பெருமளவில் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.