#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என் கனவு நிறைவேறிச்சு..செம ஹேப்பியில் வேலைக்காரன் சீரியல் ஹீரோ! என்ன விஷயம் தெரியுமா??
விஜய் டிவியில் வித்தியாசமான கதைக்களத்துடன், ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு மதிய வேளையில் ஒளிபரப்பாகி பிரபலமான தொடர்களில் ஒன்றாக இருப்பது வேலைக்காரன். இந்த தொடர் வெளிவந்த புதிதில் ரஜினி நடிப்பில் வெளிவந்த முத்து படத்தின் கதையைப் போல இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. ஆனாலும் இத்தொடர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது.
இதில் வேலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சபரிநாதன். துவக்கத்தில் ஆர்ஜேவாக இருந்த அவர் பின்னர் விளம்பரப் படங்கள் மற்றும் குறும்படங்கள் போன்றவற்றில் நடித்துள்ளார். மேலும் யூடியூப் சேனலில் வெப்சீரிசிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சபரி விஐபி-2, துப்பறிவாளன், சைகோ, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, நட்பே துணை போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது வேலைக்காரன் தொடரில் நடித்து வரும் சபரி புதிதாக தனது கனவு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த புகைப்படத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் அவர் தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.