வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
பாப்கார்ன் காலாவதியானதை கொடுத்ததால் கடுப்பான ரஜினி ரசிகர்கள், திரையரங்கு பணியாளர்களை கதறவிட்டனர்,
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், டிஜெ ஞானவேல் இயக்கத்தில், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம், அக்.10 ம் தேதியான நேற்று உலகெங்கும் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 5 மொழிகளில் வெளியான வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வேகத்தடையால் நிகழ்ந்த சோகம்; லாரி சக்கரத்தில் சிக்கி மகன், பேரன் கண்முன் தலை நசுங்கி பெண் பலி.!
காலாவதியான சோளப்பொரி
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் நகரில் வெள்ளையப்பன் திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த திரையரங்கில் வேட்டையன் படம் பார்க்க வந்த ரஜினி ரசிகர்கள் இடைவேளையின்போது சோளப்பொரி வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது, பாக்கெட்டில் காலாவதி தேதி முடிந்து நீண்ட நாட்கள் ஆனது தெரியவந்தது.
ரஜினி ரசிகர்கள் ஆவேசம்
மேலும், சோளப்பொறியும் லேசான எண்ணெய் வாசனையுடன் நாட்கள் ஆகிவிட்டதை உறுதி செய்துள்ளது. இதனால் ஆவேசமடைந்த மக்கள், தங்கள் வாங்கிய சோளப்பொறியை கையில் எடுத்து வந்து கேன்டீனில் இருந்த பணியாளர்களுடன் வாதம் செய்தனர். அவர்கள் சரிவர பதில் அளிக்காததால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, புகாரும் வழங்கப்பட்டது. ஒருசிலர் பாப்கார்னை அங்கிருந்த பகுதிகளில் தூக்கி வீசி தங்களின் ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.
திரையரங்க கேண்டீனில் காலாவதியான உணவுப் பொருட்கள்… வேட்டையன் பட இடைவேளையில் கேண்டீனை ஆத்திரத்தில் வேட்டையாடிய பொதுமக்கள்#Kodaikanal | #Movie | #Vettaiyan | #Theatre | #Canteen | #Snacks | #PolimerNews pic.twitter.com/8apZ8TKP4Y
— Polimer News (@polimernews) October 11, 2024
வீடியோ நன்றி: பாலிமர் தொலைக்காட்சி
இதையும் படிங்க: காலாவதியான செய்தியாளர் ஐ.டி கார்டுடன் மசாஜ் சென்டரில் அடாவடி; இளைஞர் கும்பலை வறுத்தெடுத்த ஒரிஜினல் செய்தியாளர்கள்..!