#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தல அஜித் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகை! யார் அந்த நடிகை தெரியுமா?
அஜித் படம் என்றாலே அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து விசுவாசம் படத்தில் நடித்துள்ளார் தல அஜித். வீரம், வேதாளம், விவேகம் என வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த இந்த கூட்டணி தற்போது விசுவாசம் படத்தில் பிசியாக உள்ளது.
இந்நிலையில் விசுவாசம் படத்திற்கு பிறகு ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் என்ற திரைப்படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஹிந்தியில் நடிகர் அமிதாப் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளார். மேலும் படம் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தினை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளார்.
இந்நிலையில் பிங்க் படத்தில் ஒரு முக்கியகாம கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.