#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுத்த அஜித்.! என்ன படம் தெரியுமா.?
2012ம் ஆண்டு "போடா போடி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். தொடர்ந்து நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் திரைப்படத் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என்று பன்முகத் திறமை கொண்டவராக உள்ளார்.
இதில் நானும் ரவுடி தான் படத்தை இயக்கும்போது இதில் நடித்த நயன்தாராவுடன் காதல் மலர்ந்து, இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர், உலகம் என்று இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அஜித்தின் விடாமுயற்சி படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது கதையில் அஜித்திற்கு விருப்பம் இல்லாததால், அவர் நீக்கப்பட்டு, இப்போது மகிழ்திருமேனி விடாமுயற்சி படத்தை இயக்குகிறார்
இந்நிலையில் திடீரென அஜித் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ் சிவனுக்கு கொடுத்துள்ளாராம். இந்தப் படத்தின் கதை விவசாயம் சார்ந்தது என்று கூறப்படுகிறது. மேலும் இதிலும் த்ரிஷா தான் கதாநாயகியாக நடிப்பார் என்றும் தகவல் பரவி வருகிறது.