#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"பண்ணது தப்பு தான் மன்னிச்சிடுங்க" விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "லியோ" திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகமே லியோ திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஒரு பேட்டியில் லோகேஷ் " 3 வருடங்களுக்கு முன்பே தான் ஒரு கதையை ரஜினியிடம் கூறியிருந்ததாகவும், அதை கமலஹாசன் தயாரிக்க இருந்ததாகவும் கூறியிருந்தார். அந்த வீடியோவை நெட்டிசன் ஒருவர் வெளியிட்டு இருந்தார்.
மேலும், அந்த வீடியோவில் "உங்களுக்கும், விஜய்க்கும் இடையில் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியும்" என்றும் அந்த நபர் கூறியிருந்தார். அதற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக் இட்டிருந்தார்.இதனால் விஜய் ரசிகர்கள் விக்னேஷ் சிவன் மீது கோவத்தில் இருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் பொருட்டு விக்னேஷ் சிவன், "லோகேஷ் பேசிய வீடியோவை மட்டும் தான் நான் பார்த்தேன். அந்த ட்வீட்டை நான் பார்க்கவில்லை. லோகேஷை எனக்கு பிடிக்கும். தளபதியின் லியோ படத்தை பார்க்க நானும் ஆவலாக உள்ளேன். அனைவரும் சேர்ந்து லியோ படத்தை கொண்டாடுவோம்" என்று கூறியுள்ளார்