#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விக்னேஷ் சிவனை சைக்கோ என்று திட்டிய நயன்தாரா.. பேட்டியில் உண்மையை கூறிய விக்னேஷ் சிவன்.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. மலையாள நடிகையான நயன்தாரா முதன் முதலில் ஐயா திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தனது நடிப்பு திறமையினால் ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்னும் பெயர் பெற்றிருக்கிறார். இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் பணியாற்றிய போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார்.
இதன் பின்பு வாடகை தாய் முறை மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயானார் நயன்தாரா. இதனையடுத்து விக்னேஷ் சிவன் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் நயன்தாராவை குறித்து பேசியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, "நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது முத்த காட்சி ஒன்று வரும். அக்காட்சி வேண்டாம் என்றால் மாற்றிக் கொள்ளலாம் என்று நயன்தாரா என்னிடம் வந்து கூறினார். ஆனால் நான் இருக்கட்டும் என்று கூறிவிட்டேன். அதற்கு நயன்தாரா என்னை "சைக்கோ ஏன் இப்படி பண்ற" என்று செல்லமாக திட்டினார். இவ்வாறு விக்னேஷ் சிவன் பேட்டியளித்தார்