#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரு திருமணத்தால் உறவினர்களாக மாறப்போகும் விஜய் மற்றும் அதர்வா! யாருடைய திருமணம் தெரியுமா?
தமிழ் சினிமாவின் பிரபல குடும்பங்களான இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரின் குடும்பம் மற்றும் மறைந்த நடிகர் முரளியின் குடும்பம் ஒரு திருமணத்தால் உறவினர்களாக மாறவுள்ளனர்.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் சகோதரியின் பேத்தி சினேகா பிரிட்டோ ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தினை இயக்கியுள்ளார். இவர் சிங்கப்பூரில் MBA படித்துள்ளார்.
அதே கல்லூரியில் இவருடன் சேர்ந்து படித்தவர் மறைந்த நடிகர் முரளியின் கடைசி மகனும் அதர்வா முரளியின் சகோதரர் ஆகாஷ் முரளி. இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இருவரும் வெவ்வேறு மதத்தினை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் செய்வதில் ஆரம்பத்தில் சிக்கல் நீடித்துள்ளது. தற்போது ஒருவழியாக இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் நிச்சயதார்த்தம் வரும் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தற்போது 'தளபதி 64' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் விஜய் இந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொள்ள உள்ளாராம். இவர்களுடன் மேலும் பல திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது.