#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் படத்திற்கு பேசியவர்கள் ஏன் ஓவியா படத்திற்கு பேசவில்லை? வச்சு செய்யும் விஜய் ரசிகர்கள்!
நடிகர் விஜய் படம் என்றாலே ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகொண்டேதான் இருக்கும். காவலன் படத்தில் தொடங்கி இன்று சர்க்கார் படம் வரை ஏதாவது ஒரு வில்லங்கத்தை ரிலீசுக்கு முன்பு சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறது தளபதி படம். தளபதி படத்திற்கு பிரச்சனை தருபவர்கள் அடுத்தவர்களின் படத்திற்கு எங்கே போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.
சர்க்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் தம் அடிப்பது போன்ற படம் வெளியாகி பலரது விமர்சனத்துக்கு ஆளானது. விஜய் தம் அடிப்பதை ஊக்குவிப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த புகைப்படம் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் பிக் பாஸ் புகழ் தலைவி ஓவியா நடித்துள்ள புது படம் 90 ml . இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகிவருகிரியாது. ஒரு பெண்கள் பட்டாளத்தை வழிநடத்தும் ஓவியா பெண்கள் மனதிற்குள் ஒளிந்திருக்கும் ஆசைகள் பற்றிய வெளிப்பாட்டை இதை படத்தில் காட்டியுள்ளார். பெண்கள் தம் அடிப்பது, தண்ணி அடிப்பது, கொச்சையாக பேசுவதுமாக உள்ளது.
விஜய் வெறும் தம் அடித்ததற்கே இவளோ பேசியவர்கள் இப்போ பெண்களை தப்பாக வழிநடத்தும் ஓவியா விஷயத்தில் எங்கே போனார்கள் என்று கமெண்ட் செய்துவருகின்றனர் விஜய் ரசிகர்கள்.