பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வேற லெவல் கொண்டாட்டம்! செம கெத்தாக விஜய் ரசிகர்கள் செய்த காரியம்! தீயாய் பரவும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிக்கட்டி பறப்பவர் தளபதி விஜய். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி இந்தியளவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாள் போன்றவற்றை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாவைப் போல கொண்டாடுவர்.
மேலும் தளபதி ரசிகர்கள் விஜய் நற்பணி இயக்கம் என்ற பெயரில் பேரிடர் காலங்களிலும், கஷ்டப்படும் மக்களுக்கும் பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் விஜய் குறித்த எந்த தகவல்கள் வெளிவந்தாலும் அதனை பெருமளவில் ட்ரெண்டாக்குவர். இந்நிலையில் பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த அழைப்பு விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் அவரது ரசிகர்கள் விஜய்க்கு முழு உருவ சிலை வைத்து கொண்டாடியுள்ளனர். அந்த சிலையை விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.