பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நடிகர் விஜயை விமர்சித்த தமிழிசை சவுந்தரராஜன்!
சினிமாவில் நேர்மையை கடைபிடிக்க முடியாதவர்கள், அரசியலில் எப்படி நேர்மையாக இருப்பார்கள்? என்று நடிகர் விஜய்க்கு, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அவர், சில நடிகர்கள் முதலமைச்சர் கனவுடன் திரைப்படங்களில் நடிப்பதாகவும், அவர்கள் சினிமாவில் மட்டுமே முதலமைச்சராக முடியும் என்றும் கூறினார். கள்ளக்கதை மூலம் படம் எடுப்பதும், கள்ள ஓட்டு குறித்து பேசுவது தாங்கள் அல்ல என்றும் சர்க்கார் பட சர்ச்சை பற்றி நடிகர் விஜயை சாடினார்.
மேலும் சினிமாவிலேயே நேர்மையை கடைபிடிக்க முடியாதவர்கள், அரசியலில் எப்படி நேர்மையாக இருப்பார்கள்? என்று மறைமுகமாக நடிகர் விஜையை தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்தார்.