#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இரத்தம் தெறிக்க, செம மாஸ்.! சும்மா பட்டையை கிளப்பும் தளபதியின் லியோ பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!
தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'லியோ'. இப்படத்தில் நடிகை திரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் தளபதி விஜய் இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு இன்று லியோ படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" வெளியாகும் என போஸ்டர் உடன் அறிவிக்கப்பட்டது.
மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதற்கான ப்ரமோ வீடியோவை நேற்று முன்தினம் வெளியிட்டு தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று 12 மணிக்கு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இரத்தம் தெறிக்க செம மாஸாக இருக்கும் அந்த போஸ்டர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.