பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தளபதி 63-ஐ முந்திய தளபதி-64 அப்டேட்! விறுவிறுப்பான பணிகள் தெறிக்கவிடும் விஜய்; ரசிகர்கள் செம உற்சாகம்.!
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து நடித்து வருகிறார் விஜய். தெரி, மெர்சல் படங்கள் ஏற்கனவே மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் தளபதி 63 படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார்.
மேலும் கதிர், யோகிபாபு, ஆனந்தராஜ், இந்துஜா போன்ற பல்வேறு பிரபலங்களும் இந்த படத்தில் நடித்துவருகின்றனர். ஏறக்குறைய ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தளபதி 63 படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
Mega summer 2020 biggie #Thalapathy64 core technical crew all set and ready to rock..
— Kaushik LM (@LMKMovieManiac) June 6, 2019
Dir : @Dir_Lokesh
Music : @anirudhofficial
Dop : Sathyan Sooryan
Editor : Philomin Raj#ThalapathyVijay
இந்நிலையில் தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விஜய்க்கு கதை சொன்ன நிலையில் தளபதி-64 படத்தை அவர் இயக்குவது உறுதியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூர்யன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் யுத்தம் செய், முகமூடி, கைதி, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Thalapathy64 - New editor - New cinematographer ~ This is a huge decision by a actor who's stardom is greater in whole south indian cinema!! 😍😎🔥
— Hbk Kavinkannan Vfc (@kavinhbk08) June 7, 2019
♠ #Thalapathy64 ~ Will be a huge BlockBuster ♠
மேலும், மாநகரம், கைதி படங்களிலேயே பணியாற்றிய ஃபிலோமின் ராஜ் தளபதி 64 படத்தின் எடிட்டராக ஒப்பந்தமாகியுள்ளார். இவ்வாறாக இப்படத்தின் கேமராமேனும் எடிட்டரும் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள். இப்படம் 2020ம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள்.
Great Director😉
— 😍Prem Vijay😎 (@Premkumar18241) June 7, 2019
Mass music Director😎
Super Actor😍#Thalapathy64 Blockbuster 2020🙏 pic.twitter.com/iY30G1cuhX