#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தளபதி விஜய்யின் அத்தை மகளுக்கு, பிரபல இளம்நடிகரின் தம்பியுடன் திருமணம்! அதுவும் எங்கே? எப்போது தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா. இவர் நடிகை விஜய்யின் அத்தை மகள் ஆவார். சினேகா சட்டம் ஒரு இருட்டறை படத்தின் 2 ஆம் பாகத்தை இயக்கியுள்ளார்
இந்நிலையில் சினேகாவும் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷூம் சிங்கப்பூரில் படித்தபோது காதலித்து வந்துள்ளனர். பெரும் போராட்டங்களுக்கு பிறகு இருவரது காதலுக்கும் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அவர்களது திருமணத்தை வரும் 23 ஆம் தேதி சென்னை சாந்தோமில் உள்ள தேவாலயத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா வைரஸ் பெருமளவில் பரவி வருவதால், திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடபட்டுள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்வார் என ரசிகர்களால் பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.