யாருக்கு ஓட்டு போடவேண்டும்?? நடிகர் விஜய் சேதுபதி அறிவுரை!!



vijay sethubathy talk about vote


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தென் மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியவர் நடிகர் விஜய்சேதுபதி.

அதனை தொடர்ந்து பீட்சா, இதற்குதானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா, ரம்மி, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ,சூதுகவ்வும்,றெக்க,  கவண், கருப்பன்,சேதுபதி, செக்க சிவந்த வானம், 96 என குறுகிய காலத்தில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்..

vijay sethupathi

தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில,  சமூகத்திற்காக பலவிதமான நன்மைகளை செய்துவிட்டு வெளியே தெரியாமல் இருக்கும் பல நல்ல உள்ளங்களையும் கண்டுபிடித்து அவர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.


இந்தநிலையில் நடிகர் விஜய் சேதுபதி அரசியல் விழிப்புணர்வுக்காக பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்காகவும் வாக்களிப்பது குறித்து பேசியுள்ளார். அதில், "பொதுமக்கள் அனைவரும் அரசியலை விட்டு விலகக்கூடாது. அரசியல் சாக்கடை என்று தவறாக சொல்லி விட்டார்கள். அனால் அது அவ்வாறு கிடையாது. நமக்கு சரியானவர்கள் போட்டியிடவில்லை என்றாலும், அதை தேர்தல் மூலம் தெரிவிக்க வேண்டும். அனைவரும் ஓட்டு போட்டு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிலிருந்து விலகக் கூடாது என கூறியுள்ளார்.