#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் சேதுபதிக்கு தமிழ்நாட்லதான் இப்படின்னா, இப்போ கேரளாவிலும் இப்படியா? வீடியோ!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சாதாரண ஒரு துணை நடிகராக தமிழ் சினிமாவிற்குள் வந்த இவர் தற்போது தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு பிரபல நடிகராக வளர்ந்துள்ளார். முற்போக்கு சிந்தனை கொண்டவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
தற்போது மாமனிதன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி.
தமிழில் இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. சயீரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி.
அண்மையில் கேரளா சென்ற விஜய் சேதுபதியை கண்ட ரசிகர்கள் பொது இடத்தில் அவரை சுற்றி வளைத்துள்ளனர். கையில் செல்போன் உடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் குவிந்தனர். இதனால் கூட்டத்தில் சிக்கிய விஜய் சேதுபதி அதிலிருந்து விடுபட முடியாமல் தத்தளித்துள்ளார். அதே வேளையில் ரசிகர்களின் செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.
@VijaySethuOffl you are beautiful inside and out.. #MakkalSelvan... Respect and love to you #VijaySethupathi... Fan moment for many... pic.twitter.com/V1mItVmNQR
— Sampath Miryala (@MiryalaSampath) January 25, 2019