#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் கெட்டப் இதுதானா? வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தில் வந்துவிட்டார் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றது. தற்போது இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
சில வாரங்களுக்கு முன்பு வெளியான சீதக்காதி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. ஆனால், சீதக்காதி திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. தற்போது சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் நாயகி காயத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் லியோனின் மகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிப்பதாக ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்தன.
தற்போது அதை உறுதி செய்யும் வகையில் காக்கி உடையில், ஆட்டோ ட்ரைவர் கெட்டப்பில் இருக்கும் விஜய் சேதுபதியின் புகைப்படம் ஓன்று வெளியாகியுள்ளது. இதன் மூலம் மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிப்பது உறுதியாகியுள்ளது.