#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கால் டாக்ஸிக்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி செய்த பெரும் உதவி! தீயாய் பரவும் வீடியோ!
கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரித்து வரும் திரைப்படம் கால் டாக்ஸி. இந்த திரைப்படத்தில் ஹீரோவாக சந்தோஷ் சரவணன் நடித்துள்ளார் மேலும் அவருக்கு ஜோடியாக அஸ்வினி என்பவர் நடித்துள்ளார். மேலும் அவர்களுடன், நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாபு, ஆர்த்தி கணேஷ், சிவகுமார், சந்திரமௌலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தை பாண்டியன் இயக்கியுள்ளார். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பாணர் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, ரிலீஸ் செய்வதற்கான இறுதிகட்ட பணிகள் தீவிரமாக தயாராகி வருகிறது.
Here it is the teaser of #CallTaxi. Congrats team.
— VijaySethupathi (@VijaySethuOffl) October 30, 2020
▶️ https://t.co/l9VvopFea4@PandiyanDirect1 @RaveendranR14 @urkumaresanpro @saravana23san @Ashwini_chandr @JsamCinemas
கால்டாக்சி டிரைவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது குறித்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இதன் டீஸரை விஜய் சேதுபதி சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.