#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா.. நடிகர் விஜய்யுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஜாலி ட்ரிப்! அட.. யாரெல்லாம் போயிருக்காங்க பார்த்தீங்களா! வைரல் வீடியோ!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து, கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். அவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட்.
இந்த படம் ஏப்ரல் 13ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இதன் ட்ரைலர் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 3 பாடல்கள் வெளியாகி அனைவரையும் பெருமளவில் கவர்ந்து செம ஹிட்டாகி வருகிறது.
இந்த நிலையில் பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் பீஸ்ட் படக்குழுவினரை ரைடு அழைத்துச் சென்றுள்ளார். அதாவது விஜய் கார் ஓட்ட இயக்குனர் நெல்சன், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, அபர்ணா தாஸ், ஹீரோயின் பூஜா ஹெக்டே, நடன இயக்குனர் சதீஷ் ஆகியோர் ஜாலியாக பேசுக்கொண்டே அவருடன் பயணம் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Rolls-Royce tour with #Vijay and #Beast team ❤️pic.twitter.com/la3068LTOF
— 🧨 Thalapathy Paris 🧨 (@ThalapathyParis) April 10, 2022