#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் டீவியிலிருந்து சன் டிவிக்கு மாறும் விஜய் டிவி பிரபலம்! யார் தெரியுமா?
தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஓன்று விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றது. அது இது எது, நீயா நானா, கலக்கப்போவது யாரு. பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
அதேபோல விஜய் தொலைக்காட்சியில் வரும் நடிகர், நடிகைகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றனர். சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோசங்கர் என அனைவரும் விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்கலே. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சரண்யா.
நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நடிகர் அமித்துக்கு ஜோடியாக அந்த தொடரில் கதாநாயகியாக நடித்தார். நெஞ்சம் மறப்பதில்லை தொடர் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புது தொடரில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார் சரண்யா.
அந்த புது தொடருக்கு "ரன்" என பெயரிடப்பட்டுள்ளதாகவும், விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் இந்த தொடரை தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற தொடரான தெய்வமகள் தொடரில் நாயகனாக நடித்த பிரகாஷ்தான் இந்த தொடரில் நாயகனான நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.