பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ரூமின் கதவை தட்டி தொந்தரவு செய்த விடுதி மேலாளர்; நடிகை அதிர்ச்சி தகவல்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் வந்து என்னை தொடும், ஈரமான ரோஜாவே, ஆயுத எழுத்து உட்பட பல தொடர்களில் நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகை சியமந்தா கிரண்.
இவர் சன் தொலைக்காட்சியில் வெளியான நிலா உட்பட பல தொடர்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்பாளர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், திருச்சியில் செயல்பட்டு வரும் தனியார் ஹோட்டல் ஒன்றில், அவர் அறையெடுத்து தங்கி இருந்தபோது மேலாளருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறிய நடிகை, மேலாளர் மிகவும் கடுமையான முறையில் நடந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.
அறையெடுத்து தங்கிய மறுநாள் காலை 5:30 மணி அளவில் அறையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நிலையில், அதற்கு முன்னதாகவே மேளாளர் வந்து கதவைத் தட்டி பிரச்சனை செய்ததாகவும் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
மேலும், திருச்சியில் செயல்பட்டு வரும் அந்த விடுதியில் தங்க வேண்டாம் என புகைப்படத்தையும் பதிவு செய்து இருக்கிறார்.