#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மேக்கப் இல்லாமல் டிடி எப்படி இருக்கார் பாருங்கள்! மேக்கப் இல்லாமல் டிடி வெளியிட்ட புகைப்படம்!
விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி வெளியிட்டுள்ள மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.
விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி. இவர் தொகுத்து வழங்கும், வழங்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெறுள்ளது. குறிப்பாக ஜோடி நம்பர் ஒன், காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகள் இவரது திறமைக்கு ஒரு உதாரணம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல், ஒருசில படங்களிலும் நடித்துள்ளார் டிடி. இப்படி தொலைக்காட்சி, சினிமா என பல வருடங்களாக இளமை துள்ளலுடன், அழகிய சிரிப்புடன் தமிழ் மக்கள் மத்தியில் வலம்வந்துகொண்டிருக்கிறார் டிடி. மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சி மட்டுமில்லாது சமூகவலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக இருந்துவருகிறார்.
அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவரும் இவர் தற்போது எப்போதும் உங்க வீட்டு பொண்ணு என்று தலைப்பிட்டு மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். எப்போதும் மேக்கப் போட்ட முகத்துடன் டிடி யை பார்த்த ரசிகர்கள், தற்போது மேக்கப் இல்லாத புகைப்படத்தை பார்த்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்.