#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"என் எதிரே ரெண்டு பாப்பா".. பாக்யா, ராதிகா இருவருக்கும் கணவனாக அறிமுகமாகும் கோபி.. அடுத்தடுத்து டுவிஸ்ட்.. ப்ரோமோ வைரல்..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி நெடுந்தொடரில், ரேஷ்மா பசுபுலேட்டி, கே.எஸ் சுசித்ரா, நேஹா மேனன், சதிஷ் குமார், ரித்திகா தமிழ் செல்வி, விஜே விஷால், ரஞ்சித் உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த தொடரில் கடந்த வாரம் வரை பாண்டிச்சேரியில் நடைபெறும் உறவினரான தாடி பாலாஜியின் இல்லத் திருமணத்திற்கு கணவர் கோபியுடன் ராதிகா புறப்பட்டு சென்றுள்ளார்.
அதே இடத்திற்கு தனது நண்பனான பழனிச்சாமி, பாக்யலட்சுமியின் சமையலுக்கு ஏற்பாடு செய்துவிட்டு அனைவரும் அங்கு முகாமிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே திருமணத்திற்கு வந்தது கதையில் ட்விஸ்ட் வைத்துள்ளது.
அடுத்த வாரத்தில் பல கலகலப்புகளை பார்வையாளர்களுக்கு கொடுக்கும் பொருட்டு, பாக்கியலட்சுமி வாடிக்கையாளர் என்ற முறையில் கோபிக்கு சாப்பிட பால் பாயசம் வேண்டுமா? என கேட்டுள்ளார்.
அதன்பின், கோபி ஆத்திரமாக பழனிசாமியிடம் பாக்கியா இருக்கும் இடத்திற்கு நீ ஏன் வந்தாய்? என்று கேட்க, தூரத்தில் இதனை கவனிக்கும் தாடி பாலாஜி, செல்வியிடம் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று கேட்கிறார்.
அப்போது, கோபியை காண்பித்து பாக்யலட்சுமியின் கணவர் அவர் என அறிமுகம் கொடுக்க, மறுநாளில் கோபியை ராதிகாவின் கணவர் என மற்றொரு அறிமுகம் நடக்கிறது. இதனால் பாலாஜி எப்புட்றா? என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்புகிறார்.