#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாக்கியலட்சுமிக்கு ஆப்பு வைக்க சூழ்ச்சி செய்யும் கோபி.. சிக்கிகொள்ளும் பாக்யா.! பரபரப்பான ப்ரோமோ.!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர், தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
புதுச்சேரியில் நடைபெறும் திருமணத்திற்கு சமைக்க சென்றுள்ள பாக்யாவிற்கும் - அங்கு உறவினரின் திருமணத்திற்கு வந்துள்ள ராதிகா-கோபி ஆகியோருக்கும் இடையே நடைபெறும் போட்டிகள் அடுத்தடுத்த விறுவிறுப்பை கொடுத்து வந்தன.
இந்த நிலையில், பாக்யாவை கோர்த்து விடுவதாக நினைத்து கோபி, பாக்யாவிற்கு சமைக்கத் தெரியாத மலேசிய உணவை சமைக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கிறார்.
அந்த டாஸ்கை எடுத்த பாக்கியா உணவை சிறப்பாக சமைத்து கொடுத்தாரா? என்ற ஆவலை ஏற்படுத்தும் பொருட்டு தற்போது பிரமோ விஜய் டிவி நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் எஞ்சியுள்ள நாட்களும் பாக்கியலட்சுமி தொடர் விறுவிறுப்புடன் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.