#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சேலையில் சிலைபோல் மின்னும் விஜய் டிவி டிடி.. லைக்ஸ் குவியும் லேட்டஸ்ட் புகைப்படம்..
விஜய் டிவி தொகுப்பாளினி டிடியின் கியூட் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி. இவர் தொகுத்து வழங்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெறுள்ளது. அதில் ஜோடி நம்பர் ஒன், காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகள் இவரது திறமைக்கு ஒரு உதாரணம். இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல், சில படங்களிலும் நடித்துள்ளார். இவரது குழந்தை தனமான சிரிப்பும், குறும்பு தனமான பேச்சும் ரசிகர்களிடயே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும் லைக்ஸ் குவிந்துவருகிறது.
இந்நிலையில், சேலை கட்டி பார்க்க தேவதைபோல் ஜொலிக்கும் புகைப்படம் ஒன்றை டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் பெற்றுவருகிறது.