#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தலையில் முக்காடு.. கையில் ரோஜாப்பூ மாலை.. விஜய் டிவி டிடி எங்கு சென்றுள்ளார் பாருங்கள்.. வைரல் புகைப்படம்..
கையில் ரோஜாப்பூ மாலையுடன் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி வேளாங்கண்ணியில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சி மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி. விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்துவழங்கியுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளன.
சின்னத்திரை மட்டுமில்லாது வெள்ளித்திரையிலும் ஒருசில படங்களில் நடித்துள்ளார் டிடி. தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்கிவரும் டிடி தற்போது வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு சென்றிருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கையில் ரோஜா பூ மாலையுடன் இருக்கும் அவர், கொரோனா பெரும்தொற்றுக்கு பிறகு தான் சென்றுள்ள புனிதத்தலம் எனவும், நம் எல்லோருக்காவும் மாதாவிடம் வேண்டிக்கொண்டதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.