பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விரைவில் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பொன்மகள் வந்தால் ரோகிணியுடன் இரண்டாவது திருமணம்..! தீயாய் பரவும் தகவலின் உண்மை என்ன..?
கடந்த சில வாரங்களுக்கு முன் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று விஜய் டிவி பொன்மகள் வந்தால் கதாநாயகி மேக்னாவின் விவாகரத்து மற்றும் சக நடிகரான விக்கியுடன் இரண்டாவது திருமணம்.
விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு என்ற தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கேரளாவை பூர்விகமாக கொண்ட மேக்னா. நான்கு வருடம் ஒருவரை காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட மேக்னா, கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்துவந்தார்.
இந்நிலையில்தான் சமீபத்தில் இவருக்கு முறைப்படி விவாகரத்து கிடைத்தது. மேக்னா விவாகரத்து பெற முக்கிய காரணம் அதே தொடரில் அவருக்கு கணவனாக நடிக்கும் விக்கி க்ரிஷ் தான் என பரவலாக பேசப்பட்டது. இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விக்கி, எனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவி மற்றும் 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது. எல்லோர் குடும்பத்திலும் உள்ள மாதிரி எனது குடும்பத்திலும் சிறு சிறு சண்டைகள் உள்ளது. அதற்காக நான் எனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டேன் என்று இல்லை.
எனது குடும்ப பிரச்சனையை நான் பார்த்துக்கொள்கிறேன். அதேபோல் மேக்னா என்னுடன் தொடரில் நடிக்கும் ஒரு சிறந்த நண்பர். அவ்வளவுதான். எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை என விக்கி கூறியுள்ளார்.