#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகராக சின்னத்திரையில் களமிறங்கும் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்.!
தமிழ் திரையுலகின் மூத்த நடிகராகவும், தன்னால் இயன்ற உதவிகளை செய்து மக்களின் மனதில் குடிகொண்ட நடிகராகவும் இருந்து வந்தவர் மயில்சாமி. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.
கொடுப்பதில் கர்ணனாக இருந்த மயில்சாமி தன்னிடம் உதவி கேட்டு வருவோரையும், நேரில் பார்ப்போரையும் அன்புடன் பேசி அவர்களுக்காக ஓடோடி உதவி செய்து இன்று அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்.
மறைந்த நடிகர் மயில்சாமிக்கு அன்பு, யுவன் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இருவரையும் நடிகராக்கி பார்க்க ஆசைப்பட்டு இருந்தார். கடந்த 2022-ம் ஆண்டு அன்புவின் நடிப்பில் அல்ட்டி என்ற திரைப்படம் வெளியானது.
அதன் பின் சிதம்பரம் ரயில்வே கேட் படத்தில் நடித்திருந்தார். இரண்டாவது மகனும் தனக்கு கிடைத்த படங்களில் நடித்தாலும், இருவருக்கும் வாய்ப்புகள் என்பது அமையவில்லை.
தற்போது சின்னத்திரையில் யுவன் தங்கமகள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள தொடரில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நம்ம வீட்டுப் பொண்ணு தொடரில் நடித்த அஸ்வினி நடிக்க உள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடரின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.