#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சூப்பர் சிங்கர் சின்மயிக்கு சொந்த ஊர் மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு; வைரலாகும் வீடியோ.!
தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஓன்று விஜய் தொலைக்காட்சி. எண்ணற்ற கலைஞர்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த பெருமை விஜய் தொலைக்காட்சியையே சாரும். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெறுகிறது.
கலக்க போவது யார் , சூப்பர் சிங்கர், பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் ஒருவர் சின்மயி. இலங்கை பிறந்த சின்மயி தற்போது கனடாவின் டொரண்டோ நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
வாழ்த்துகள் சின்மயி..! 😊
— Vijay Television (@vijaytelevision) April 4, 2019
சூப்பர் சிங்கர் ஜூனியர் - சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு உங்கள் விஜயில்.. #SSJ #NipponPaintSSJ #Sinmaye @NipponIndia #VijayTelevision pic.twitter.com/RmcfKTnEhR
ஆனால் இலங்கையில் அவரது தாத்தா, பாட்டி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என சொந்த பந்தங்கள் இன்றும் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் தான் மீண்டும் இதுவரை சொந்த நாட்டிற்கு சென்று தனது உறவினர்களை சந்தித்ததில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். இதனால் சின்மயியை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் விதமாக இந்த புரோமோ வீடியோ அமைந்துள்ளது.