#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல விஜய் டிவி நடிகைக்கு விரைவில் திருமணம்! யார் அந்த நடிகை தெரியுமா?
தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஓன்று விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ஒன்றுதான் ராஜா ராணி. ஆலியா மானசா செண்பா என்ற கதாபாத்திரத்திலும், குளிர் 100 % பட ஹீரோ சஞ்சீவ் கார்த்தி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.
இந்த தொடரில் கார்த்திக்குக்கு முதலில் தங்கையாக நடித்தவர் வைஷாலி. பின்னர் ஒருசில காரணங்களால் ராராஜா ராணி தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். சரவணன் மீனாட்சி செந்தில் நடித்த மாப்பிளை என்ற தொடரிலும் முக்கியா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வைஷாலி.
நீண்ட காலமாக சீரியலை விட்டு விலகியிருந்த வைசாலி தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அஞ்சலி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது பெற்றோர் இவருக்கு திருமண ஏற்பாடு செய்துளார்களாம்.
இவர் பல ஆண்டுகளாக சத்யதேவ் என்பவரை காதலித்து வந்த நிலையில், இவர்களுக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்து வைஷாலிக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.