#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்!! ஓணம் புடவையில் பார்க்கும்போது 20 வயது குறைந்துவிட்ட டிடி!! வைரலாகும் புகைப்படங்கள்..
ஓணம் புடவையில் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்தியா முழுவதும், குறிப்பாக கேரளாவில் ஓணம் பண்டிகை கலைக்கட்டியுள்ளது. கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஓணம் பண்டிகையானது தற்போது கேரளா மக்கள் மட்டுமின்றி தமிழகத்திலும் பெரும்பாலான மக்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர். அதேநேரம் சினிமா பிரபலங்களும் தங்கள் வீட்டில் ஓணம் பண்டிகையை கொண்டாடிமகிழ்கின்றனர்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிவரும் பிரபல தொகுப்பாளினி டிடி, தனது வீட்டில் ஓணம் கொண்டாடிய சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஓணம் புடவையில் காட்சியளிக்கும் அவரை பார்த்த நெட்டிசன்கள், ஓணம் புடவையில் டிடி 20 வயது குறைந்துவிட்டதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.