பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்குள் புகுந்த புது வில்லி... வைரலாகும் ப்ரோமோ வீடியோ...
விஜய் நடிக்கவேண்டிய படத்தில் விஜய் சேதுபதி! படமும் சூப்பர்ஹிட்! எந்த படம் தெரியுமா?
![vijay-was-the-first-choice-for-sanga-thamilan-movie](https://cdn.tamilspark.com/large/large_1566894648_thalapathy-vijay-vijay-sethupathi-23984.jpg)
விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் சங்கதமிழன் திரைப்படம் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா இந்த படத்தில் நாயகிகளாக நடித்துள்ளார்.
வாலு, ஸ்கெட்ச் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஜயசந்தர் இந்த படத்தை இயக்கியுள்ளார். படம் குறித்து பேட்டி ஒன்றில் கூறிய விஜயசந்தர், தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் கேட்டாததால் இந்த கதையை பவன் கல்யானுக்காக எழுதியதாகவும், பவன்கல்யாண் அரசியலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதால் அவருக்கு பதில் விஜய் சேதுபதியை வைத்து தயாரிப்புப்பணிகள் தொடங்கியதாவும் கூறியுள்ளார்.
மேலும், தமிழில் இந்த கதையை தளபதி விஜய்யை மனதில் வைத்தி எழுதியதாகவும், விஜய் பெரிய மாஸ் ஹீரோ என்பதால் அவருக்கு ஏற்றாற்போல் வசனங்களை எழுதியதாகவும், தற்போது விஜய் சேதுபதியும் விஜய் அளவிற்கு மாஸ் ஹீரோ ஆகிவிட்டதால் விஜய் சேதுபதிக்காக ஒருசில திருத்தங்கள் மட்டுமே செய்ததாகவும், கதை விஜய் சேதுபதிக்கு கச்சிதமாக பொருந்திவிட்டதாகவும் இயக்குனர் கூறியுள்ளார்.