#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜயின் எந்தெந்த படங்கள் 100 கோடியை தாண்டியது? அதுவும் எத்தனை நாட்களில்? முழு விவரம் இதோ!
தமிழ் சினிமாவின் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது சர்க்கார் திரைப்படம். படம் முழுவதும் அரசியல் சாயம் பூசப்பட்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது சர்க்கார் திரைப்படம். ஆனால் சர்க்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குறிய காட்சிகள் இருப்பதாகவும் அதை நீக்காவிட்டால் படம் தடை செய்யப்படும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
என்னதான் பல சர்ச்சைகள் வந்தாலும் வசூல் ரீதியாக படம் மிகப்பெரும் வெற்றிபெற்றுள்ளது. இதுவரை 250 கோடிக்கு மேல் வசூலாகியிருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 100 கோடியை தாண்டி பாக்ஸ் ஆபிசில் இடம்பிடித்த தளபதியின் ஆறாவது திரைப்படம் சர்க்கார். வெறும் இரண்டே நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளது சர்க்கார் திரைப்படம்.
சரி வாங்க எந்தெந்த படம் 100 கோடியை தாண்டியது மற்றும் 100 கோடியை தாண்ட எடுத்துக்கொண்ட நாட்கள் பற்றி பாக்கலாம்.
1. துப்பாக்கி
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான படம் துப்பாக்கி. தமிழ் சினிமாவின் அடையாளங்களில் துப்பாக்கி படம் மிகவும் முக்கியமான ஓன்று. துப்பாக்கி படம் 160 கோடி வசூல் செய்த்தது. முதல் 100 கோடியை தாண்ட துப்பாக்கி படம் 14 நாட்கள் எடுத்துக்கொண்டது.
2. கத்தி
மீண்டும் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான படம் கத்தி. விவசாயிகளின் கஷ்டத்தை வெளிப்படுத்திய திரைப்படம். மாபெரும் வெற்றிபெற்ற கத்தி திரைப்படம் 130 கோடி வசூல் செய்தது. மேலும் முதல் நூறு கோடியை தாண்ட கத்தி திரைப்படம் எடுத்துக்கொண்ட நாட்கள் 12 நாட்கள்.
3. தெறி
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் தெறி. இத்திரைப்படம் 170 கோடி வசூல் செய்தது. மேலும் முதல் நூறு கோடியை தாண்ட கத்தி திரைப்படம் எடுத்துக்கொண்ட நாட்கள் 6 நாட்கள்.
4 பைரவா
இயக்குனர் பரதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பைரவா. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இதுவரை 100 கோடி வசூல் செய்துள்ளது பைரவா திரைப்படம். இதற்கு எடுத்துக்கொண்ட நாட்கள் 4 நாட்கள்.
5. மெர்சல்
ஆளப்போறன் தமிழன் என்று தமிழ் சினிமாவிற்கு உறக்கச்சொன்ன திரைப்படம் மெர்சல். படத்தின் பெயரைப்போலவே மெர்சலான வெற்றிபெற்றது இந்த திரைப்படம். படத்தின் இயக்குனர் அட்லீ. மெர்சல் திரைப்படம் 100 கோடி வசூலை வெறும் மூன்றே நாட்களில் கடந்தது.
6. சர்க்கார்
மீண்டும் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக 100 கோடியை தாண்டிய திரைப்படம் சர்க்கார். படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இதுவரை 250 கோடி வசூல் செய்துள்ளது. அதுவும் இரண்டே நாட்களில் 100 கோடியை தாண்டியுள்ளது சர்க்கார் திரைப்படம்.