பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஐசியுவில் உயிருக்கு போராடும் நடிகர் போண்டாமணிக்கு பணஉதவி செய்த பிரபல முன்னணி நடிகர்.! எவ்வளவு தெரியுமா??
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்பவர் போண்டாமணி. அவர் தற்போது சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிரை காப்பாற்ற நடிகர், நடிகைகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என சகநடிகரான பெஞ்சமின் கோரிக்கை விடுத்து சில தினங்களுக்கு முன் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியை நேரில் சந்தித்துள்ளார். அவரின் மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும் என உறுதியளித்துள்ளார். மேலும் திரையுலக நடிகர்கள் பலரும் போண்டாமணிக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் போண்டா மணிக்கு மருத்துவசெலவுக்கு விஜய் சேதுபதி பணஉதவி செய்துள்ளாராம். இதுக்குறித்து நடிகர் போண்டாமணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் நடிகர் விஜய்சேதுபதி உடனே வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாயை போட்டுள்ளார். அவர் கொடுத்த ஒரு லட்சம் எனக்கு ஒரு கோடிக்கு சமம் என மனதார நன்றி தெரிவித்துள்ளார்.