#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஹேண்ட்சம் ஹீரோ விஜய்தேவரகொண்டாவுக்கு பிரபல நடிகரின் மகளோடு காதலா? வைரலாகும் நெருக்கமான புகைப்படங்கள்!
தெலுங்கில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அந்த படத்தை தொடர்ந்து அவர் கீதா கோவிந்தம், டாக்சிவாலா, நோட்டா, டியர் காம்ரேட் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவருக்கென ஏராளமான இளம் ரசிகைகள் உருவாகினர். விஜய் தேவரகொண்டா தமிழில் நோட்டா என்ற படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்களையும் பெற்றார். இந்த நிலையில் இளம் ஹீரோவாக, வெற்றி நாயகனாக வலம் வரும் விஜய தேவரகொண்டா அவ்வப்போது காதல் சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.
ஆரம்பத்தில் அவர் நடிகை ராஷ்மிகா மந்தனாவை காதலிப்பதாக பேசப்பட்டது. ஆனால் அதனை இருவரும் மறுத்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது பிரபல நடிகரின் மகளை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது நடிகர் சயீப் அலிகான் மகளும், நடிகையுமான சாரா அலிகான் விஜய்தேவரகொண்டாவின் தீவிர ரசிகை. அவர் அவருடன் நெருக்கமாக எடுத்த செல்பி படத்தையும் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் தற்போது இருவரும் காதலிப்பதாக இந்தி திரையுலகில் தகவல்கள் பரவி வருகிறது