பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஏன், என்னாச்சு? விஜயகாந்த் இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை! பெரும் ஏமாற்றத்தில் தேமுதிக தொண்டர்கள்
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணி தொடங்கி மாலை 7 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயிலிலும் வரிசையில் நின்று பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றியுள்ளனர். ஆனாலும் சில காரணங்களால் ஏராளமான திரைப்பிரபலங்கள் பலரும் வாக்களிக்கவில்லை.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் அனைவரும் விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி பள்ளியில் வாக்களித்தனர்.
மேலும் அப்பொழுது பேசிய விஜய பிரபாகரன், விஜயகாந்த் மாலை 6 மணியளவில் வந்து வாக்களிப்பார் என கூறியிருந்தார். இந்நிலையில் விஜயகாந்தின் வருகையை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் காத்திருந்துள்ளனர். ஆனால் அவர் 7 மணி வரையிலும் வாக்களிக்க வரவில்லை. இந்த நிலையில் தேமுதிகவினர் ஏமாற்றத்தில் வருத்தத்துடன் திரும்பியுள்ளனர்.
இதற்கிடையில் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாலும், மேலும் கொரோனா தொற்று அதிகம் பரவிவரும்நிலையில் அவரது உடல்நலம் கருதியும் வாக்களிக்க வரவில்லை என தகவல்கள் பரவி வருகிறது.