என்ன ஒரு கேவலமான செயல்.! ஐஸ்வர்யாவின் கொடூரத்தை வீடியோ போட்டு அம்பலப்படுத்திய விஜயலட்சுமி கணவர் , ஷாக் ஆன ரசிகர்கள்.!



vijayalakshmi husband leaked  video of ishwarya

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் 2 .இதில் 16 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில்,10 போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது .இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு போட்டிகள் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது.

 மேலும் கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் மற்றவர்களை தோற்கடித்து தங்களது தனித்தன்மையை நிரூபிக்கும் வகையில் போட்டிகள் நடைபெற்று வருகிறது .

இதில் இந்த வாரம் வித்தியாசமான போட்டி ஒன்று நடைபெற்றது .அதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் போட்டியாளர் கை வைத்து கொள்ள வேண்டும் மற்ற போட்டியாளர்கள் ஏதாவது தொந்தரவு செய்து அவர்களை அந்த இடத்தில் இருந்து கையை எடுக்க செய்து தோற்கடிக்க வேண்டும்.

vijayalakshmi

இந்த போட்டியில் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டனர் .ஆனால் ஐஸ்வர்யா மட்டும்  போட்டியாளர்கள் மோசமான விஷயங்களை செய்து தன்னை மிகவும் காயப்படுத்தியதாக கூறி கதறி அழுதார் .

இந்நிலையில் விஜயலட்சுமியின் கணவர் பெரோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார் அதில் அந்தப் போட்டியில் விஜயலட்சுமியின் கண்ணில் ஐஸ்வர்யா ஸ்ப்ரே அடிக்கும் காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் இந்த காட்சி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பவில்லை.


இந்த வீடியோ தற்போது வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .