#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மூக்கில் டியூப்புடன் சிகிச்சை..! தற்கொலைக்கு முயற்சித்த நடிகை விஜயலட்சுமியின் தற்போதைய நிலை என்ன.? வைரல் புகைப்படம்.!
பிரபல நடிகை விஜயலக்ஷ்மி தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரது தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
விஜய், சூர்யா நடித்த ப்ரெண்ட்ஸ் திரைப்படம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை விஜயலக்ஷ்மி. ப்ரெண்ட்ஸ் படத்தை அடுத்து பாஸ் என்கிற பாஸ்கரன், மீசையை முறுக்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் சென்னை திருவான்மியூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் மிகுந்த மன அழுத்தம் காரணமாக தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் அதிக அளவிலான இரத்த கொதிப்பு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்ச்சித்த இவர் தற்போது சென்னைஅடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் மூக்கில் டியூப் பொருத்தப்பட்டு விஜயலக்ஷ்மி சிகிச்சை பெற்றுவரும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என கமெண்ட் செய்துவருகின்றனர்.