#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
போக்கிரி பட வில்லி நடிகையா இது.? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.!?
தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை தொடர்ந்து அளித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த விஜயை இளைய தளபதி என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர். இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார்.
இது போன்ற நிலையில் நடிகர் விஜயின் சினிமா பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது தான் போக்கிரி படம். இப்படத்தில் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் கதாநாயகனாகவும், அசின் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் வடிவேலு, பிரகாஷ்ராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் உள்ள பாடல்களும் அனைத்துவிதமான ரசிகர்களையும் கவர்ந்தது என்று கூறினால் மிகையாகாது. வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது அட்டகாசமான நடிப்பு திறமையை இப்படத்தில் வெளிப்படுத்தி இருப்பார்.
இது போன்ற நிலையில் பிரகாஷ்ராஜுடன் கிளாமர் வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் பிருந்தா பரேக். இவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. இப்புகைப்படத்தில் போக்கிரி பட வில்லி நடிகையா இது என்று ரசிகர்கள் ஆச்சரியத்திற்க கமெண்ட் செய்து வருகின்றனர்.