#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாளைக்கு ரிலீஸ், இப்போ இப்படி ரகசியத்தை போட்டு உடைச்சுட்டாரே ! விஜய்சேதுபதி வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன், அதனை தொடர்ந்து விஜய் சேதுபதியின் 25 -வது படமான சீதக்காதியை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவருக்கு வில்லனாக நடிகர் வைபவ்வின் சகோதரர் சுனில் நடித்துள்ளார்.
மேலும் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படம் நாளை திரைக்கு வருகிறது.
சீதக்காதி படம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் விஜய் சேதுபதி, ஒரு கலைஞனுக்கு ஏற்படுகிற எண்ணத்தை கலையின் மூலமாக வெளிப்படுத்துவான் என்று சொல்வார்கள். அந்த வகையில் பாலாஜி தரணிதரனின் கலைக்கான நன்றிக்கடன் தான் சீதக்காதி. இப்படிப்பட்ட ஒரு படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் பாலாஜி தரணிதரனுக்கு நன்றி.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻#SeethakaathiFromTomorrow pic.twitter.com/pmO8ztYmod
— VijaySethupathi (@VijaySethuOffl) 19 December 2018
இந்தப் படத்தில் படம் தொடங்கி 40 நிமிடங்கள் தான் நான் வருவேன். அப்புறம் ஏன் இந்தப் படத்தை எனது 25-வது படமாகச் சொல்ல வேண்டும், என்னுடைய படமாகச் சொல்ல வேண்டும்? படத்தில் நான் ஏற்று நடித்துள்ள அய்யா என்கிற கதாபாத்திரத்தின் ஆன்மா, கலையைப் பற்றிய படம். திரையரங்கில் படத்தை பார்க்கும்போது உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். உலகத்தில் எங்கோ ஓர் மூலையில் இருக்கும் உங்களையும் என்னையும் இணைத்த இந்த கலைக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.