பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"கோபி ஹேப்பி அண்ணாச்சி".. பாக்கியலட்சுமி சீரியல் கோபி - ராதிகாவின் திருமணம்.. லீக்கானது போட்டோ..!!
விஜய் தொலைக்காட்சியில் மக்களுக்கு மிகவும் பிடித்த நெடுந்தொடராக இருப்பது பாக்கியலட்சுமி. இந்த தொடர் பெங்காலி சீரியலில் ரீமைக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சுசித்ரா, சதீஷ் மற்றும் ரேஷ்மா என பலரும் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில், சீரியல் தொடங்கியதிலிருந்து மக்களால் கவனிக்கப்பெற்று வருகிறது.
இந்த தொடரில் பாக்யா கணவரை பிரிந்து தனது வழியில் பயணித்து வருகிறார். கோபியும் அவர் விரும்பியது போல ராதிகாவை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களது திருமணம் நடக்குமா? என்ற கேள்வி மற்றும் ஆர்வம் ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
அத்துடன் கோபியின் தந்தை, நான் உயிருடன் இருக்கும் வரை இந்த திருமணம் நடக்காது என்று ஒரு பக்கம் கூறி மண்டபத்தை தேட, கோபி கண்டிப்பாக ராதிகாவை திருமணம் செய்தே தீருவேன் என்று உறுதியாக இருக்கிறார். இந்நிலையில் படப்பிடிப்புதளத்தில் ராதிகாவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது என்பது போல தெரிகிறது.
படப்பிடிப்பு தளத்தில் மயூவுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகிய நிலையில், அவர் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதைக்கண்ட ரசிகர்கள் திருமணம் முடிந்துவிட்டது கோபி இனிமே ஹேப்பிதான் என்று கூறி வருகின்றனர்.