#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சினிமா உலகிலேயே முதன்முதலாக, யாருமே செய்யாத செயல்.! மாஸ் காட்டும் விக்ரம்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சீயான் விக்ரம். தனது உடலை வருத்தி படத்தின் கதைக்கு ஏற்றார் போல் தோற்றத்தை கொண்டுவருவதில் இவருக்கு இணை இவரே என்று கூறலாம். சங்கர் இயக்கத்தில் உருவான ஐ போன்ற படங்களில் தனது உடலை வருத்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் நடிகர் விக்ரம்.
இந்நிலையில் விக்ரம் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ராஜேஷ் செல்வா இயக்கத்தில் உருவான கடாரம் கொண்டான் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்தவர்கள் இப்படத்தினை சூப்பர் டூப்பர் ஹிட் என விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் விக்ரம் அடுத்ததாக டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.மேலும் மாபெரும் பட்சத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்து புதிய ஆச்சரியம் அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் விக்ரம் உலகத் திரைப்படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு 25 வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்காக அமெரிக்காவை சேர்ந்த முக்கிய நிறுவனம் ஒன்று பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.