#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தங்கமான மனசுய்யா.! தன் வீட்டில் வேலை பார்ப்பவருக்காக நடிகர் விக்ரம் என்னவெல்லாம் செய்துள்ளார் பார்த்தீங்களா.! நெகிழ்ந்த ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. விக்ரம் திறமையான நடிகர் மட்டுமின்றி, சிறந்த மனிதரும் கூட.
விக்ரம் அண்மையில் தனது வீட்டில் பணியாற்றும் மேரி என்பவரது மகனின் திருமணத்தில் மனைவியுடன் கலந்துகொண்டார். அதுமட்டுமின்றி அவர்களுக்காக விக்ரம் பல உதவிகளை செய்துள்ளாராம். மேரி என்பவர் நடிகர் விக்ரம் வீட்டில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறாராம்.
இவரது கணவரும் விக்ரம் வீட்டில் வேலை செய்துவந்த நிலையில் காலமாகியுள்ளார். அதனை தொடர்ந்து நடிகர் விக்ரமே மேரியின் இருமகன்களையும் படிக்க வைத்துள்ளார். அவர்களுக்காக பெசன்ட் நகரில் வீடு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். மேலும் அவரது மகன் தீபக் என்பவருக்கு மாப்பிள்ளை வீட்டாரின் அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுகொண்டு கோலாகலமாக திருமணம் செய்து வைத்துள்ளாராம். நடிகர் துருவ் விக்ரமும், மேரியின் மகன் ரிஷப்சன் விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் தனது வீட்டில் பணியாற்றுபவர்களுக்காக பல லட்சம் செலவு செய்த நடிகர் விக்ரமின் நல்ல மனதை பலரும் பாராட்டி வருகின்றனர்.